டயகமயைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரண தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனையும் சந்தேக நபராக பெயரிடவுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் இன்று (26) அறிவித்துள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.