சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து 11 அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.