ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பெறவுள்ள தண்டனை!

Date:

ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும், தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் இன்று குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர்.இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக 24 மாத கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மூவருக்கும் தலா 25 ஆயிரம் டொலர்கள் வீதம் அபராதமாக விதிக்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...