இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகள் போதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை லொத்தர் சபையின் தலைவராக 2017ம் ஆண்டு பதவி வகித்த காலப் பகுதியில், வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொண்டமையினால், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது