அதிபர்- ஆசிரியர்கள் சங்கத்தின் தொடர் போராட்டம் தொடர்பான முடிவு இன்று அமைச்சரவை கூட்டத்தில்

Date:

தொடர்ந்தும் அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார். அத்தோடு, இன்று முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை கைவிடுவது குறித்து தீர்மானிக்கப்படுமென ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல் மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 22 நாட்களாக அதிபர் – ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...