ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் எழுதியிருந்தது என்ன?

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்கு காரணம்” என ஆங்கில எழுத்துக்களினால் எழுதப்பட்ட வசனம் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இந்த வசனம் சிறுமி எழுதியதா?  இல்லை, சிறுமிக்கு தீ காயங்கள் ஏற்பட்டதன் பின்னர், விசாரணைகயை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வேறு எவரேனும் எழுதியதா? என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த எழுத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, அரச பகுப்பாய்வு அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வுகளை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....