சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு விரைவில் தடை!

Date:

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அதற்கமைய, பொலித்தீன் பேக், பிளாஸ்டிக் கோப்பை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் இடியப்ப தட்டு உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, முகக்கவசத்தை உரியவாறு அப்புறப்படுத்துவதற்கு தேவையான சுகாதார ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.

 

இதற்கான ஒழுங்கு விதி அடங்கிய ஆவணம். சுகாதார அமைச்சின் அனுமதியை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...