மேல்மாகாணத்தில் வசிக்கும், எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.