நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் | இராணுவத் தளபதி

Date:

தற்போதைய நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுமாறும் பொருத்தமான முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து வகையான முகக்கவசங்களும் இக்காலத்துக் குப் பொருந்தாது என வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் கூறுகின்றனர். கொவிட் நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உலக நாடுகள் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவ தற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கொவிட் ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத் துள்ளோம். எனினும், பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும் என சவேந்திர சில்வா மேலும் கூறினார்.
இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். அனைவரையும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்குச் செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், சில இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத் தில் உருவாகக் கூடும். செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்துக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...