நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்- எதிர்க்கட்சி தலைவர்!

Date:

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் பால்மா தட்டுப்பாடு போல மீண்டுமொரு தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படவிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

 

அதற்கமைய, மிகவிரைவில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

மக்கள் திரள் திரளாக நின்று வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெறுகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார நிர்வாகத்தினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு அந்நிய செவாவணி இருப்பு நெருக்கடி தொடர்ந்தும் அவ்வாறே இருந்தால் எரிபொருள் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எரிபொருளுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் மக்கள் எரிபொருள் வரிசையிலும் காத்திருக்க நேரிடும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...