எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

கடந்த தினத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் LP எரிவாயு தேவையில் சுமார் 5% தை உற்பத்தி செய்யும் நிலையில் இந்த தயாரிப்புகளை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சமமாக வழங்குகிறது.

 

மின்சக்தி அமைச்சு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சபுகஸ்கந்த பிரதேசத்தில் நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு சமையல் எரிவாயு தேவையில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...