சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடபட்ட சில சுகாதார நடைமுறைகளை சட்டமாக பிரகடணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமான அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (14) முற்பகல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.