அதிபர்-ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு!

Date:

ஆசிரியர் ,அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.அதன் பிரதிநிதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை உபக்குழுவில் அறிவிக்குமாறு தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சந்திப்பு அன்றைய தினம் மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34வது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...