ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய ரணில் விக்கிரமசிங்க!

Date:

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் இடையில் இன்று(17) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது, கொவிட் தொற்றை ஒழிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் முன்னாள் பிரதமரினால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்ததாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வ கட்சித்தலைவர்களையும் அழைக்குமாறு ஐ.தே.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...