கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) காலை பதிவாகியுள்ளது.
ராகமை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த மொஹமட் ஜனான் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்று ஏற்பட்டதை தெரிந்து தாம் பணியாற்றிய அதே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த இந்த மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன்னதான தொற்று உக்கிரநிலையை அடைந்ததினால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.