300 ஆண்டுகள் பழமைவாய்ந்த உனவடுன கனதேவி ஆலயம் மற்றும் அதன் முக்காடு வண்டியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக ஆக்கும் வர்த்தமானியை வெளியிடுவதற்கு தொல்பொருள் துறை ஆராய்வு!

Date:

கிராமப்புற கலைஞர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் கடந்த 13ம் திகதி காலி உனவடுன பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பொழுது உனவடுனவையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முக்காடு வண்டி மற்றும் ஆலயத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயும் படி தொல்பொருள் துறை முகாமையாளருக்குஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென்னிந்திய சிற்பிகள், வண்டியை கடின சந்தனத்தைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.மேலும் 1983 கலவரத்தின் போது ஒரு குழுவினரால் இவ்வண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வைபவத்தில் காலி, உனவடுன கணதேவி ஆலயத்தின் பராமரிப்பாளர் கே.பி.ஆர். மதுசங்க, கிராமப்புற கலைஞர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...