பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப்பகங்களில் நேற்று (20) அதிக சனநெருக்கடியை அவதானிக்க முடிந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால் எவரும் அநாவசியமாக அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.