ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அஜிஜுல்லா ஃபாசில்

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர், பெரும்பாலும் இவர்கள் கிரிக்கெட்டுக்கு எதிரி என்று நினைக்க, அவர்களோ அஜிஜுல்லா ஃபாசில் என்பவரை நேற்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளனர். அஜிஜுல்லா பாசில் ஏற்கெனவே ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செப்டெம்பர் 2018 முதல் ஜூலை 2019 வரை பதவி வகித்துள்ளார்.
இனி வரும் தொடர்கள் பற்றி இவர் முடிவெடுப்பார் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிகெட்டை இவர் வழிநடத்துவார் என்றும் தாலிபான்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, தாலிபான்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கின்றனர், அதனால் கிரிக்கெட் நடவடிக்கை தொடர்ந்து புத்துயிர்ப்புடன் செயல்படும் என்றார்.
காபூலிலிருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ஆப்கான் அணியின் கிரிக்கெட் தொடர்களான இலங்கை, பாகிஸ்தான் தொடர்கள் நடைபெறுவதற்கான வழிவகைகளைக் கையாள்வதில்தான் புதிய சேர்மன் ஃபாசிலின் திறமை இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஆப்கான் கிரிக்கெட் வீரர்களான முகமது நபி, ரஷீத் கான் ஆகியோரது எதிர்காலம் பற்றி கேள்வி எழுந்துள்ளது, இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளனர், இது குறித்த நிச்சயமின்மைகளும் உள்ளன.
ரஷீத் கானும் நபியும் ஆப்கானில் இல்லை இருவரும் பிரிட்டனில் உள்ளனர். இங்கு ரஷீத் கான் தி ஹண்ட்ரெட் தொடரில் பங்கேற்று ஆடிவருகிறார். ஆப்கான் வீரர்கள் ஐபிஎல் 2021-ல் பங்கேற்பது குறித்து எந்த சந்தேகமும் இதுவரை இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...