தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Date:

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

மேலும் குறித்த இணையதளத்தைப் பார்வையிடுவதன் ஊடாக ஒருவர் 2021ஆம் ஆண்டிற்கான வாக்காளராகப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதேவேளை, நீங்கள் முன்பு 2020 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், 2021ஆம் ஆண்டுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்றமையினால், 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் எண்ணும் மாதிரிகளை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...