கொவிட் 19க்கு எதிரான தடுப்பூசியை சிங்கப்பூரில் 5.7 மில்லியன் மக்களில் 80 சதவிகிதமானவர்கள் முழுமையாக செலுத்தியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் “ஓங் யே குங்”(ong ye Kung) இன்று( 29) ஞாயிற்றுக்கிழமை “எங்கள் மக்கள்தொகையில் 80% மானோர் இரண்டு டோஸினையும் முழுமையாக பெற்று கொவிட்டுக்கு எதிரான மைல்கல்லை நாங்கள் கடந்துவிட்டோம் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும்
“COVID-19 க்கு எதிராக செயற்பட்டு நெகிழக்கூடிய முன்னேற்றத்தை சிங்கப்பூர் அடைந்துள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் சிறிய நகர-மாநிலத்தின் செயற்பாடு உலகிற்கு எடுத்துக் காட்டாக இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.பிற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே மற்றும் சிலி தங்கள் மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகையினர் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கயை ஆரம்பித்த சிங்கப்பூர், பெரும்பாலும் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/7382473689/posts/10160245630223690/?sfnsn=mo-Al Jazeera English