நியூசிலாந்தில் இன்று (31)அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளதாவது,
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுப் பகுதியில் இன்று ( 31) அதிகாலை 2:52 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 40 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.
நில நடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கியது இதனால் அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரம் குறித்து உடனடியான தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.