ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவிற்கும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நட்பு ரீதியான சந்திப்புக்காக ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.,
இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.