வாட்சப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம்..!

Date:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, வாட்சப் நிறுவனத்திற்கு, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம், 225 மில்லியன் யூரோக்கள் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 5310.53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்த ஆணையம், கடந்த டிசம்பர் மாதம் அறிக்கை சமர்பித்து இருந்தது. அதில் 50 மில்லியன் யூரோக்கள் வரை அபராதம் விதிக்க முன்மொழிந்து இருந்தது. ஆனால் மற்ற ரெகுலேட்டர்கள் அபராதத்தை உயர்த்த வலியுறுத்தியதை அடுத்து அபராத தொகை 225 மில்லியன் யூரோக்களாக உயர்த்தப்பட்டது.

இதற்கு முன் இந்த அளவு அதிக அபராதம் எந்த நிறுவனத்திற்கும் விதிக்கப்படவில்லை என்று தரவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்று தெரிவித்துள்ள வாட்சப் நிறுவனம், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...