இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக இன்றைய போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.