2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அல்-ஜசீரா சர்வதேச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை எனவும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனி போன்ற பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்து மீள்வதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
காணொளி