பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளின் தடை ‌தொடர்பில் விரைவில் வர்த்தமானி!

Date:

பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளுக்கு தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த 5 உற்பத்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் லன்சீட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித பொருட்கள் அவற்றில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...