இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில் குசல் ஜனித் பெரேரா 3 பவுண்டரிகள் அடங்களாக அதிகபடியாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 23 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.போட்டி தொடர்கிறது.