பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்

Date:

சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இந்த பாடசாலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்படாத பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோருக்கும் விரைவில் தடுப்பு ஊசி ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...