தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

Date:

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று  காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்படும் விடுதிகளில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடு தொடர்பில் செய்திகள் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டது.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் இவ்வாறான மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...