உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலில் தலிபான் தலைவர்!

Date:

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபர்கள் பட்டியலில் தலிபான் அமைப்பின் இடைக்கால அரசில் துணை பிரதமராக பதவியேற்றுள்ள முல்லா அப்துல் கனி இடம்பெற்றுள்ளார். தோஹா ஒப்பந்தத்தில் உடன்படிக்கை ஏற்படுவதற்கு இவரே முக்கிய நபராக கருதப்படுகிறார்.

தோஹாவில் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையின்போது அப்துல் கனி தலைமையிலான குழுதான் தலிபான் சார்பில் பங்கேற்றது. அமைதியான மனிதராகக் கருதப்படும் இவர் குறித்த பல தகவல்களை இரகசியமாகவே வைத்துள்ளார் அத்தோடு மிக அரிதாகவே அறிக்கைகளை வெளியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கனி மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் அங்கமாகவே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, அண்டை நாடுகளை தொடர்பு கொள்வது, உறவை மேம்படுத்தும் வகையில் சீனா, பாகிஸ்தானுக்கு பயணம் என பல முக்கிய முடிவுகள் அப்துல் கனியை ஆலோசித்த பிறகே எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த 2010ஆம் ஆண்டு, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அப்துல் கனி கைது செய்யப்பட்டார். இருப்பினும்,ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவது என அமெரிக்கா முடிவு எடுத்த பின், அவர் விடுவிக்கப்பட்டார். தலிபான் அமைப்பின் இணை நிறுவனராகவும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதிலும், இடைக்கால அரசில் அவருக்கு ஏற்றார்போன்ற போதுமான அதிகாரம் கொண்ட பதவி வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

டைம்ஸ் இதழ் ஒவ்வோர் ஆண்டும் சர்வேதச அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலை புதன்கிழமை(15) வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...