கரிம உர இறக்குமதிக்கு அனுமதி!

Date:

இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) முதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு குறித்த உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அனைத்துப் பயிர்களுக்கான உரத்தையும் தட்டுப்பாடின்றி சந்தையில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக தனியார் துறைக்கு உரம் இறக்குமதி செய்ய ​அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக நெல் சாகுபடிக்கு தேவையான கரிம உரங்கள் உள்நாட்டிளேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போதிய அளவு கரிம நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜன் மற்றும் 45 கிலோ பொட்டாசியம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...