மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க ஊடகவியலாளராக திகழ்ந்தார்.
கம்புறுபிடிய தினமின செய்தியாளராக ஊடக பணியை ஆரம்பித்த இவர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வாரா வாரம் இக்பால் அத்தாஸ் எழுதிவரும் அரசியல் கண்ணோட்டத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து லங்காதீபவில் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குறித்து Newsnow இன் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.