வர்த்தகர்களுக்கான அபாராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு!

Date:

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை, 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை சட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்படுத்தபட்ட நிலையில், இதுவரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில், எதிர்வரும் புதன்கிழமை அதில் முதல் முறையாக திருத்தம் ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நுகர்வோரை பாதுகாப்பதற்காக வெவ்வேறு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.எனினும், வர்த்தமானி மூலம் விலைகளை கட்டுப்படுத்துவது நடைமுறை ரீதியாக இடம்பெறுவதில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அது உண்மை என்றும், அதனை ஏற்றுக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அறவிடப்படும் அபராதப் பணம் 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.இந்த நிலையில், அந்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்க திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...