உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு ஆலோசனை!

Date:

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக் காலம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த ஆட்சிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு காணப்படுகிறது.எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.தற்போதைய கொவிட் பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு முறையான சேவைகளை செய்ய வாய்ப்புகள் அமையவில்லை எனவும், எனவே இதனைக் கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...