ஆப்கானிஸ்தான் விடயத்தில் குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு!

Date:

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆப்கானிஸ்தானை பொருத்தமட்டில் குவாட் நாடுகளான அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்திய தூதரக பொருளாதார மனித உரிமை கொள்கைகள் விடயத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட ஆப்கானிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தை அமுல் செய்வது என்று குவாட் நாடுகள் தீர்மானித்துள்ளன.

குவாட் நாடுகள் சீனாவை பெயர் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் அவை சீனாவுக்கு எதிரான முடிவை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதை உலகுக்கு வெளிப்படையாக உணர்த்தியுள்ளன.

யூனியன் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்ட இந்து பசிபிக் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பது என்று குவாட் உச்சிமாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுதந்திரமான கடற் பயணம், விமானப் பயணம் ஆகியவற்றை உறுதி செய்வதோடு நாடுகளுக்கு இடையிலான எல்லை தகராறுகள் மற்றும் அவர்களுக்கு ஜனநாயக் முறையில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நில ரிமை இறையாண்மைக்கு பாதிப்பு இல்லாமல் தீர்வுகாண வேண்டும் என்று குவாட் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வடகொரியா பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று குவாட் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருவ நிலை மாறுதல் தொடர்பாக உச்சிமாநாட்டில் மிகச் சுருக்கமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப 20 50 ஆம் ஆண்டில் மாசு வெளியாவதை 100% முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...