நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தல் அதற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.