கொழும்பு மற்றும் கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

Date:

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பணிப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்களுக்கு இடையூறின்றி பயணம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வரகாபொல இடை வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கும் திட்டப்பணிப்பாளளருக்கும் தான் ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பு-கண்டி பிரதான வீதிக்கு இணையாக வலது புறத்தில் நிர்மாணிக்கப்படும் வரும் வராகபொல இடை வீதிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 98% இழப்பீடு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரகாபொலவை தவிர்த்து செல்வதற்கு வேறு மாற்று வழிகள் இல்லாததால், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2,350 மீட்டர் நீளமும் 22.80 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த வீதி நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த வீதியின் குறுக்கே 550 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் அமைக்கப்படுவது இந்த வீதியின் விசேட அம்சமாகும். இந்த திட்டத்திற்கு ரூ .4,111.16 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு – கண்டி வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு போக்குவரத்தை எளிதாக்குவதும் வரகாபொலவின் முன்னேற்றத்திற்கு உதவுவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...