பொலிஸாரின் பெயரில் நிதி மோசடி செய்த இளைஞன் கைது!

Date:

புத்தளம் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று (25) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மனைவியின் தரப்பால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சமாக பணம் வழங்க 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் எனவும் சந்தேக நபர், கணவனின் தரப்பினரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கணவன் சார்பில் குறித்த சந்தேக நபர் கேட்ட பணத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்ட இளைஞனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பணத்தைக் கொடுத்தவர்கள் சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், தமக்கும் – சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலின் ஒலிப்பதிவையும் முறைப்பாட்டாளர்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. குமாரதாச தலைமையிலான பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை (24) விருதோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்கே நபரான இளைஞனை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சனிக்கிழமை (25) புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...