கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சுனில் நரைன், லோகி பெர்கியூஸன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந் நிலையில், 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக நித்திஷ் ராணா ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அவேஷ் கான் 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...