பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின், சம்பளப் பிரச்சினை தீரும்வரை கற்பித்தல் நடக்காது

Date:

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார்? அவரது நகைச்சுவைகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உடனடியாக இந்த நகைச்சுவைகளை சொல்வதை நிறுத்துங்கள்.

பாடசாலைகளை திறந்து நடைமுறை ஆய்வுகளை நடத்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? முதலில் எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுங்கள்.

அவர் ஒக்டோபரில் தனியாக பாடசாலையைத் தொடங்க முயற்சித்திருக்கலாம். இந்த வேலை நிறுத்தத்திற்கு (28 ம் திகதி) 79 நாட்களாகின்றன. நாங்கள் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிறோம்.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கல்வி அதிகாரிகள் முறையான முடிவை எடுப்பார்களென்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...