எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.அதாவது,

கடந்த அரசாங்கத்தின் போது இந்நாடு பெற்றுக் கொண்ட GSP Plus சலுகையை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்க்கவே இந்தக் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இதற்கிடையிலேயே, பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை, நீதித்துறையின் இறைமை, மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமத்துவம், நல்லிணக்கம், சுற்றாடல், ஊடக சுதந்திரம், பிரஜைகளின் உரிமைகள் போன்ற பல விடயங்கள் பற்றி அவர்கள் இந்நாட்டிலிருந்து ஆராய்ந்து பார்ப்பதுடன் உரிய சந்திப்பின் போது GSP Plus சலுகை நாட்டுக்கு பாரிய பலமாகும் எனவும், அதனை தொடர்ந்து எமது நாட்டுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்குகின்ற நிதி உதவிகள், GSP Plus சலுகை, சர்வதேச சலுகைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

கொரோனா பேரழிவு மற்றும் தற்போதைய நெருக்கடி குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர், மேலும் எதிர்க்கட்சித் தலைவர் இலங்கையை முன்னேற்றுவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடம் தனது கட்சியின் வெளியுறவுக் கொள்கை அணிசேரா வெளியுறவுக் கொள்கை என்றும் இலங்கை சமாதான பூமியேயன்றி போராட்ட பூமி அல்ல எனவும் கூறினார்.

இந்த நேரத்தில் ஒரு பொறுப்புள்ள முற்போக்கு எதிர்க்கட்சியாக அதன் வகிபாகத்தை நன்கு உணர்ந்து அதனை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

பசுமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்கால அரசியல் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள் அத்துடன் கொள்கைகளை உருவாக்கி வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் நாடு முழுவதும் முகங்கொடுக்கின்ற தற்போதைய நிலைமையில் அரசியல் செய்யாது நவீனத்துவ எதிர்க்கட்சியின் வகிபாகத்தை வெளிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்கள் சார்பு எதிர்க்கட்சியாக தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை நிபந்தனையின்றி நிறைவேற்றுவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்துக்காக தலையிடுதல், ஊடக சுதந்திரத்துக்காக போராடுதல், நீதித் துறையின் இறைமைக்காக செயற்படல் போன்றவற்றுக்கு முன்நிற்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மக்கள்சார்பு காரணிகளுக்கு தனது ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மக்களின் ஜனநாயகத்துக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துதல், சட்டவாக்குநர் / நீதித்துறை மற்றும் நிறைவேற்றுநரின் அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியக் குழு கவனம் செலுத்தியதுடன் மேலே குறிப்பிட்ட விடயங்களை நியாயபூர்வமாக வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கத்தின் கவனத்தைச் செலுத்துவதற்கு தலையிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...