இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவசர பயணமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்.
ஒக்டோபர் 2 முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவில் சந்தித்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு செயலாளரின் இந்த பயணம் இடம்பெறுகிறது.இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் தீவிரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.