கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்று (1) அதிகாலை நாடு திறக்கப்பட்டுள்ளது.நாடு கட்டுப்பாட்டில் இருந்ததால் கொவிட்டின் தீவிர போக்கை கட்டுப்படுத்த முடிந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் (29) திகதிக்கான அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது.அதன்படி நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் குறைவடைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 923 விருந்து நேற்று (30) 912 ஆக குறைவடைந்துள்ளது.
இங்கே இரண்டாவது அட்டவணையிலிருந்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை (செப்டம்பர் 28 லிருந்து) கணிசமாக குறைவடைந்து வரும் போக்கை காணமுடிந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் பலரும் சுகாதார நடைமுறைகளை பேணுவதாகும்.இந்த நிலை மேலும் தொடர்ந்தால் கொவிட்டின் தீவிர தாக்கத்தை மேலும் குறைக்கலாம் என தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.அத்தோடு இந்த நிலையை கட்டுப்படுத்த மற்றுமொரு காரணியாக நாடு பூராகவும் செயல்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி நடவடிக்கை பிரதானமானதாகும்.அதனடிப்படையில் இதுவரை 26,171,815 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த அறிக்கைகள் காட்டுகின்ற படி சாதகமான பிரதிபலன்களை அடிப்படையாக வைத்து நாட்டு மக்கள் இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதையே நாமும் வலியுறுத்துகின்றோம். சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதனூடாக நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.