இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்க உலக வங்கியின் நிர்வாகக் குழு நேற்று (30) ஒப்புக் கொண்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
கிராமம் புற சாலை வலையமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண்மை சேவைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இந்த திட்டம் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் அதேவேளை, இந்த திட்டத்தை கண்காணிக்க தேசிய வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்படும்.இந்த கடன் தொகையை 10 வருட சலுகை காலம் உட்பட 28 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.