வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

Date:

01.04.2021 முதல் 30.09.2021 வரையான காலத்தில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

29.09.2021 ஆம் திகதிய 17/2247ம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி மூலம் 2021.10.01 இலிருந்து 2022.03.31 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகின்ற சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் காலாவதியாகின்ற குறித்த திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படுகின்றது.மேற்படி கால எல்லைக்குள் உள்ளடங்காதவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரம் மற்றும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை என்பவற்றுக்கான திகதிகள் அரசின் புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமையவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிப்படுத்தலுக்கு அமையவும் அறிவிக்கப்படும்.

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலமைகளைக் கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் – 021 222 3789 அல்லது – 021 222 7552 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...