Facebook, Instagram, WhatsApp சமூக ஊடகத் தளங்கள் செயலிழப்பு – முழு விபரம்

Date:

Facebook உட்பட அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைதளங்களான WhatsApp, Instagram ஆகியன உலகளாவிய ரீதியில் செயலிழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் பிற்பகல் முதல் இந்த சமூக ஊடக செயலிகள் செயலற்றிருப்பதாக பயனர்கள் முறைப்பாடு தெரிவித்து வருவதாக ‘வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த மூன்று பிரதான சமூக ஊடகத் தளங்களும் refresh மற்றும் loading ஆவதில் சிக்கல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலில் பிரித்தானியாவில் பயனர்கள் இதுகுறித்து தங்களின் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய சமூக தளங்களில் பதிவுகளை இட்டுள்ளனர். எனினும் தற்போது உலகம் முழுவதும் இந்த பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று செயலிகளும் Facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உடையலை என்பதுடன், இதுகுறித்து Facebook நிறுவனம் எவ்வித கருத்துகளையும் குறிப்பிடவில்லை.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...