பேஸ்புக் நிறுவன செயலிகளின் முடக்கத்தால் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வந்தர் பட்டியலில் பின்தள்ளப்பட்டார்!

Date:

சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளன.அதற்கமைய, 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கிடையில் சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...