புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை உறுப்பினராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானங்கள் சட்டத்தின் பிரிவு 3 (1) (i) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.