இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களை ஓமான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ 83 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழப்பின்றி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் ஓமான் அணியின் ஃபயாஸ் அஹமட் 42 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், ஓமான் அணி 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாட தயாராக உள்ளது.