போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சம்பியன் மும்பை!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 84 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக அணித்தலைவர் மனீஷ் பாண்டே 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 39 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றாலும் ப்ளே ஓஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...